கனடா செய்திகள்

ஹெய்ட்டிக்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

10 Jul 2018

கனடிய மத்திய அரசாங்கம் ஹெய்ட்டி நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரீபியன் நாடான ஹெய்ட்டியில் நாடு முழுவதும் குழப்பநிலை காணப்படுவதால் அந்த நாட்டுக்கான அனைத்துவித அவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறு அது வேண்டுகோள் விடுத்துள்ளது.

எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பான அந்த நாட்டு அரசாங்கத்தின் அறிவிப்பினால் அங்கு போராட்டங்கள் இடம்பெற்று, வன்முறைகளும் தீவிரம் பெற்றுள்ள நிலையில் கனடிய அரசாங்கம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

நாட்டின் வரவு செலவுத் திட்டத்தனை சமப்படுத்துவத்றகு எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்ற முடிவில் மாற்றங்களை செய்ய முடியாது என்று ஹெய்ட்டி அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.

எனினும் மக்கள் வீதிகளில் இறங்கி மேற்கொண்ட போராட்டங்களின் அழுத்தங்களை அடுத்து, தமது அந்த முடிவினை அந்த நாட்டு அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்