கனடா செய்திகள்

ஹெமில்டனில் தாயார் முன்னிலையில் 14வயது மாணவர் மீது கத்திக்குத்து

08 Oct 2019

ஹெமில்டனில் தாயார் முன்னிலையில் 14வயது மாணவர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்.வின்ஸ்டன் சர்ச்சில் மேல்நிலைப் பாடசாலைக்கு முன்னதாக நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

உயிராபத்தான நிலையில் குறித்த மாணவன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக  மூன்று சந்தேக நபர்களைக் பொலிஸார் காவலில் வைத்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு 14 வயது எனவும் மற்றொருவருக்கு 19 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார், மேலும் இருவரைத் தேடி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்