கனடா செய்திகள்

ஹலிஃபக்ஸ் வெடிப்புச் சம்பவத்தின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

06 Dec 2018

கனடாவில் பாரிய மனித அழிவை ஏற்படுத்திய ஹலிஃபக்ஸ் வெடிப்புச் சம்பவத்தின் 101ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

ஹலிஃபக்ஸ் துறைமுகத்தில் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்னர் இரண்டு போர்க் கப்பல்கள் மோதிக்கொண்டதில் சுமார் 2000 மக்கள் உயிரிழந்தனர்.

இதனை நினைவுகூர்ந்து இன்று வியாழக்கிழமை ஃபோர்ட் நீதம் நினைவுப் பூங்காவில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கனேடிய நேரப்படி காலை 9.04இற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் பிரார்த்தனை இடம்பெறவுள்ளது. இரு கப்பல்களும் மோதிக்கொண்ட குறித்த நேரத்தில் இந்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

ஃபோர்ட் நீதம் நினைவுப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் மணி ஒலிக்கப்பட்டு இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 1917ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி இமோ என்ற நிவாரண கப்பலும், பிரான்ஸ் நாட்டின் ஆயுதக் கப்பலும் ஹலிஃபக்ஸ் துறைமுகத்தில் மோதி வெடித்துச் சிதறின.

இச்சம்பவத்தில் 2000 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 9000 பேர் அங்கவீனமடைந்தனர். ஹலிஃபக்ஸ் நகரின் பெரும்பாலான பகுதி இதில் அழிவடைந்தது. கட்டங்கள் தரைமட்டமாகின. உயிர்பிழைத்தவர்கள் யாரும் தற்போது உயிருடன் இல்லாத காரணத்தால் இச்சம்பவத்தின் கோரத்தை வெளியுலகிற்கு எடுத்துச்செல்ல முடியாதுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் ஒரு நகரத்தையே அழித்து, கணக்கிடமுடியாத அளவிற்கு பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ளதென்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் ஹலிஃபக்ஸ் வெடிப்புச் சம்பவம் இன்று இரண்டாம் பட்ச சம்பவமாக மாறியுள்ளதாக ஆய்வாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்