இலங்கை செய்திகள்

ஹட்டன் சிங்கமலை வனப் பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது

14 Feb 2020

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கமலை வனப்பகுதியில் நேற்று  முற்பகல்  ஏற்பட்ட தீப்பரவில்  5 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி அழிவடைந்துள்ளது.

இதனை அடுத்து, தீயணைப்புப் பணியில், விமானப் படைக்கு சொந்தமான bell  212  ரக ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டதாக  இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல்  தீயியினை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக  ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் ஹட்டன் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்