சினிமா செய்திகள்

ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்ட அந்த தமிழ் இயக்குனர் இவர்தானா?

11 Jul 2018

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து வெளியிடுவேன் என்றும் அறிவித்து உள்ளார்.

சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

தற்போது தனது சமூக வலைத்தளத்தில், ‘தமிழ் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜி. எப்படி இருக்கீங்க... கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா? வெள்ளி கொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். எனக்கு வாய்ப்பு தருவதாக சொல்லியிருந்தீர்கள். ஆனால், நாம் நிறைய ....? இன்னும் நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. நீங்கள் எப்போதும் நல்ல மனிதர் என பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீரெட்டி இப்படி பதிவு செய்திருப்பது, தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்