இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமனம்

09 Oct 2019

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று செவ்வாய்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு 15 பேர் கொண்ட அரசியல் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்