உலகம் செய்திகள்

ஸ்பெயின் நாட்டில் பயங்கர காட்டுத்தீ

14 Sep 2021

ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள மலஹா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. 

இந்த காட்டுத்தீயால் 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. காட்டுத்தீ காரணமாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

காட்டுத்தீயை அணைக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam