கனடா செய்திகள்

ஸ்கார்பாரோவில் உள்ள தொழில்துறை களஞ்சியசாலையில் தீ விபத்து

15 Apr 2019

ஸ்கார்பாரோவில் உள்ள தொழில்துறை களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தீ எவ்வாறு பரவியது என்பது குறித்து, இதுவரை எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மில்லிகென் பகுதியில் ஸ்டீல்ஸ் மற்றும் மிட்லேண்ட் வீதிகளில் உள்ள களஞ்சியசாலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் பெருமளவான பொருட்கள் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்ற போது, அதன் மதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், குறித்த தீ விபத்து தொடர்பில் எவருக்கும் எந்த விதமான காயங்கள் ஏற்படவில்லை. இது தொடர்பில் அதிகாரிகள் தற்போது விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்