இலங்கை செய்திகள்

வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று நீதிமன்றில் ஆஜர்

11 Jul 2019

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று முற்பகல் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு, தாய்மாருக்கு கருத்தடை சத்திரசிக்சை செய்தமை, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் குருநாகல் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளதால், ஷாபி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்