இலங்கை செய்திகள்

வேலைப்பளு காரணமாக ஜெனிவா செல்லவில்லை - விக்னேஸ்வரன்

13 Mar 2018

வேலைப்பளு காரணமாக தான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜெனிவா சென்றுள்ள வட மாகாணசபை உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என அவர் தெரிவித்தார்

நேற்று கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து வைத்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அத்தோடு ஜெனீவாவுக்கு அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

வேறு யார் யார் செல்கின்றார்கள் என்பது தனக்கு தெரியவில்லை. அனைத்து விடயங்களையும் தங்களுடைய பிரதிநிதிகள் அங்கு எடுத்துரைப்பார்கள் எனத் தெரிவித்தார்.

 

 சிவநகர் மூத்தோர் சங்க தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்ற மூத்த பிரஜைகள் சங்கத்தின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், கிராமத்தின் மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்