கனடா செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை

24 Nov 2021

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பெருவெள்ளத்தால் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்துள்ளது மாகாண நிர்வாகம்.

பெருவெள்ளத்தால் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களில் தகுதியுடையவர்களுக்கு 2,000 டொலர் உதவித்தொகை வழங்க மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

குறித்த தொகையானது கனேடிய செஞ்சிலுவை சங்கம் வாயிலாக தகுதியுடையவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள குறித்த தொகை உதவியாக இருக்கும் என அமைச்சு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டு, தங்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பு கருதி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்ட மக்களே உதவித்தொகைப் பெற தகுதியுடையவர்கள்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam