இந்தியா செய்திகள்

வெளிநாட்டு சிகரெட்கள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல்

10 Oct 2019

வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு கொழும்புவிலிருந்து சந்தேகமிக்க ஐந்து நபர்கள் வருவதாக  8-ஆம் தேதி தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் அதிகாரிகள் விழிப்புடன் இருந்தனர். 


இந்நிலையில்,  இன்று அதிரடியாக கோவை விமான நிலையத்தில் பயணிகளிடம் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது, அதிகாரிகள் ரூ. 69 லட்சம் மதிப்பிலான 23,310 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.  சிகரெட்டுகளை கடத்தி வந்த 5 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த 5 பேர் பணத்திற்காக சிகரெட்டுகளை கடத்தி வந்ததாக  ஒப்புக்கொண்டனர். சுங்கச் சட்டம், 1962- ன் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்கள் மீது அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை நடந்தி வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்