கனடா செய்திகள்

வெப்ப மண்டல புயல் கிறிஸ் இந்த வார இறுதியில் நியுபவுன்லாந்தை வந்தடையலாம்

11 Jul 2018

 

வெப்ப மண்டல புயல் கிறிஸ் இந்த வார இறுதியில் நியுபவுன்லாந்தை வந்தடையலாம் என கனடா சுற்று சூழல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப் புயலானது தற்சமயம் கரோலினா கரையை விட்டு அகன்று விட்டதாகவும் வடகிழக்கு பகுதியை இன்று பின்பகுதியில் வந்தடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கின்றது.

வியாழக் கிழமை புயல் நோவஸ்கோசியவை அடையலாம் எனவும் வெள்ளிக்கிழமை நியுபவுன்லாந்தின் தென்கிழக்கு பகுதியை சென்றடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்