சினிமா செய்திகள்

விஷ்ணு விஷாலுக்கு ஜோடியான பிரபல நடிகரின் மகள்

12 Jul 2018

கதாநாயகன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ராட்சசன் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியிருக்கிறது. வெங்கடேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஸ்காந்த், சிங்கம் புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்