உலகம் செய்திகள்

விரைவில் உங்களின் வீடுகளைக் கண்காணிக்க இயந்திர நாய்கள்!

24 Jan 2019

வேலைக்குச் செல்லும்போது பிள்ளைகளை வீட்டில் உதவியாளர்களின் பொறுப்பில் விடும் பெற்றோர் அல்லது வீட்டைத் திருடர்களிடமிருந்து பாதுகாக்க விரும்பும் உரிமையாளர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

ஜப்பானிய மின்னியல் நிறுவனமான Sony அதற்குத் தீர்வு வழங்கியுள்ளது.

Aibo எனப்படும் இயந்திர மனிதக் கருவி நாய்கள்தான் அதற்கான தீர்வு!

Aibo நாய்களினுள், கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றின் இணைய, செயற்கை நுண்ணறிவுத் தன்மைகள் உங்களின் குடும்பத்தினரைக் கண்காணிக்க உதவும்.

நீங்கள் குறிப்பிடும் நேரத்தில், நீங்கள் தேடும் குடும்ப உறுப்பினரை அது கண்காணிக்கும் என Sony நிறுவனம் குறிப்பிட்டது.

உரிமையாளர்களுக்கு அவர்களின் திறன்பேசிகள் வாயிலாக அதைக் குறித்த தகவல்களும் கிடைக்கும்.

பள்ளி முடிந்து வீடு திரும்பும் உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதையும் அது கண்காணிக்க உதவும்.

ஆனால் ஒவ்வொரு நாயின் விலை 3,000 டொலர் மட்டுமே.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்