இந்தியா செய்திகள்

விமான நிலையத்தில் பார்வையாளர் கட்டணம் உயர்வு

29 Oct 2017

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வரை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் பார்வையாளர்கள் அனுமதிக்காக கட்டணம் பெறப்பட்டது. இந்தநிலையில் புதிய முனையங்கள் தொடங்கப்பட்டதும் உள்நாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டு பன்னாட்டு முனையத்தில் மட்டுமே பார்வையாளர் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பன்னாட்டு முனையத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கான கட்டணம் ரூ.70-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. இந்த புதிய கட்டணம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV