12 Sep 2023
கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் விமானத்தை அரசியல் மேடையாக மாற்றிக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலியேவ் விமானத்தில் ஆற்றிய உரை தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரச்சார மேடைகளில் உரையாற்றுவது பொன்று பொலியேவ் உரையாற்றியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் பயணம் செய்யும் விமானத்தில் கட்சி உறுப்பினர்களுக்கு ஆற்றும் உரையை நிகழ்த்தியமை ஏற்புடையதல்ல என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட்ஜெட் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இந்த உரை நிகழ்த்தப்பட்டுள்ளது. கியூபேக்கிலிருந்து கல்கரி நோக்கிப் பயணம் செய்த விமானத்தில் பொலியேவ் சொற்ப நேரம் விமான ஒலிவாங்கியை பயன்படுத்தி உரையாற்றியுள்ளார்.
பொலியேவ் உரையாற்றும் காணொளி தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் கட்சியின் ஆதரவாளர்களே அதிகளவில் பயணித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் விமான பணியாளர்கள் பயன்படுத்தும் ஒலிவாங்கியை பொலியேவ் பயன்படுத்தியமை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.