இலங்கை செய்திகள்

விமல் வீரவன்ச சஜித் பிரேமதாசவிற்கு சவால்

10 Aug 2018

கடந்த அரசாங்கத்தில் தனது அமைச்சில் தனது உறவினருக்கு வீடு வழங்கியதாக கூறப்படும் விடயத்தை நிரூபித்தால் தான் அரசியலிலிருந்து விலகுவதாக முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவங்ச  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வீடமைப்புத் துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனைக் கூறினார்.

தன்னுடன் இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முடியுமானால் நேரடி விவாதத்துக்கு வருமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு  அவர் பகிரங்க சவால் விடுத்தார். 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்