23 Jun 2022
கனடாவில், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் இழந்த தந்தை ஒருவர், தந்தையர் தினத்திற்கு மறுநாள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு, ஒன்ராறியோவிலுள்ள Vaughan என்னும் இடத்தில், Marco Muzzo என்ற நபர் மது அருந்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் Edward Lake, Jennifer Neville-Lake தம்பதியரின் பிள்ளைகளான Daniel (9), Harrison (5), Milly (2), மற்றும் பிள்ளைகளின் தாத்தாவான Gary Neville (65) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் என்பதால் தன் பிள்ளைகளின் கல்லறைகளைக் காட்டும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்த Jennifer, 2022 தந்தையர் தினம், இது உண்மையாக இருக்கக்கூடாது, உண்மையாக இருக்கவும் முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.