கனடா செய்திகள்

வின்சரின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

10 Jun 2019

வின்சரின் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக வின்சரின் Leamington மற்றும் Kingsville ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை விடுக்கப்பட்டிருந்த குறித்த எச்சரிக்கை இன்று வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக வின்சரில் உள்ள சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்