கனடா செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு Jack McLaren கோரிக்கை

15 Apr 2018

விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்க கோரி Hon . Jack McLaren Ontario நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார்.

தமிழீழ விடுதலை புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என ஒண்ராரியோ நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போதும் கோரிக்கையை எழுப்பி, அவர் அனைத்து கட்சிகளின் ஆதரவை உரிமையோடு கோரினர்.

பெருமளவான தனது ஆதரவாளர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க, கனடாவில் முதல் முதலாக ஒரு அரசியல் தலைவர் தமிழ் கனேடியர்கள் அவசியமற்ற இந்த புலிகளின் மீதான தடை மூலம் நாளாந்தம் சந்திக்கும் பிரச்சனைகளையும், சவால்களையும் விளக்கமாக அனைத்து  கட்சிகளையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சுட்டிக்காட்டினார். தனது பிரேரணையை சமர்ப்பித்து அவர் உரையாற்றும் போது பின்வருமாறு குறிப்பிடடார்,

“இலங்கையில் தமிழ் மக்கள்  1948 ல் சுதந்திரம் அடைந்ததில் இருந்தே அடக்குமுறையை  அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976 ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்க இராணுவ அமைப்பாக  விடுதலைப் புலிகள் (LTTE) உருவாக்கினர். 1983 ல் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. புலிகள் படை ஒரு வலுவான போரிடும் படையாக மாறியது.

2006 ல் கனேடிய அரசாங்கம் ஒரு இலங்கை அரசின் பொய் பரப்புரைகள் மூலம் ஈர்க்கப்பட்டு பயங்கரவாத பட்டியலில் தமிழ் புலிகளை சேர்த்தது. இந்த விளைவு தமிழ் மக்களை இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. புலிகள் தோற்றத்திற்கு காரணம் தமிழர்கள் அல்ல அதனை இன்று வரை சர்வதேசம் சரியாக புரியவில்லை. அதற்குக் காரணம் இலங்கை அரசு என்பதை யாரும் புரியாமல் பயங்கரவாதிகள் என கூறுவது வேதனையாக உள்ளது.

உள்நாட்டுப் போர் 2009 ல் முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுத போரை கை விட்டனர் .
புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக  அணி திரளப் போவதில்லை. எனவே பயங்கரவாத பட்டியலில்  இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகளாக சித்தரிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ அல்ல. மாறாக தமிழ் மக்களின் உடன் பிறப்புக்களே அவர்கள்.

ஆனால் தமிழ் புலிகளை பயங்கரவாத பட்டியலில் கனடிய அரசு இன்னமும் வைத்திருப்பது  கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் மேலாக தொங்கும் கறுப்பு மேகம் போன்றது. அவர்களை இந்த தடை இரண்டாம் தர குடிமக்களாக அவமதிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தாயகத்தில் போரில் உயிர் ஈன்ற தங்களின் உறவினர்களையும் தியாகிகளையும்  பகிரங்கமாக துக்கம் பகிர்வதையும் மற்றும் அவர்களின் நினைவஞ்சலி சேவைகள் செய்வதையும் தடுக்கிறது.

கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் எனும் நலன் கருதி, பயங்கரவாத பட்டியலில் இருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளை, கனடா அரசு அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”

மேலும் இதனை தொடர்ந்து நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது , ஒண்ராரியோ குடிவரவு அமைச்சரிடம் திரு Jack McLaren அவர்கள்  விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து பல கேள்விகளையும் எழுப்பினார்.

ஒண்ராரியோ நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையை ஒட்டாவாவில் மத்திய அரசுக்கு நேரடியாக சமர்ப்பித்து இந்த தடையை நீக்க வேண்டுகோள் விடுக்க தன்னுடன் இணைந்து கனடிய நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார் .

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்