இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகளின் தங்கப் புதையலை தோண்டும் பணி கைவிடப்பட்டது

11 Jul 2019

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இறுதிப் போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை ச.தம்பிராசா என்பவரின் காணிக்குள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த 27 ஆம் திகதி முதல் பொலிஸார் தீவிர பாதுகாப்பு வழங்கி வந்த நிலையில் இன்று அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 14 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாக வைத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், படைஅதிகாரிகள், பொலிஸார் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணிகள் கைவிடப்பட்டுள்ளன.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்