13 Aug 2019
கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார் ராஷ்மிகா. பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது: நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேனா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
எனக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசையாகத் தான் உள்ளது. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா, விஜய் படத்திற்காக தேதிகள் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார். இது ராஷ்மிகாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.