இலங்கை செய்திகள்

விஜயகலா மகேஸ்வரன் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி தேங்காய் உடைப்பு

12 Jul 2018

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன்  விடுதலைப்புலிகளை் குறித்து அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று  ​சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர்.

ஒன்றிணைந்த  எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை, மாகாண சபை உறுப்பினர்கள் பலர்  கலந்துகொண்டு தேங்காய் உடைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து குறித்த இடத்தில் சுமார் அரை மணிநேரம் ஒன்றிணைந்த எதிரணியினர் அமைதிப் போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்