இலங்கை செய்திகள்

விஜயகலா தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்பு

11 Jul 2018

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என, சிறுவர் மற்றும் மகளிர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில், விரைவான விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையொன்றைப் பெற்றுத் தருமாறு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில், விசாரணைகள் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்துமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளமைக்கு அமைய, சட்டமா அதிபரால் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொலிஸ்மா அதிபரின் அறிக்கை கிடைத்தவுடன், குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சபாநாயகருக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபர் எதிர்பார்த்துள்ளாரென, சட்டமா அதிபர் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, விஜயகலா வெளியிட்ட கருத்துத் தொடர்பில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களிடம் அறிக்கை கோரி விசாரணைகளை தற்போதே ஆரம்பித்துள்ளார் என, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்