இலங்கை செய்திகள்

விசைப் படகுகளை மீட்க நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை வருகின்றனர்.

12 Oct 2017

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட விசைப் படகுகளை மீட்க நாகை மாவட்ட மீனவர்கள் இலங்கை வருகின்றனர்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 180-இற்கும் மேற்பட்ட படகுகள் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை சிறைபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தநிலையில், சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, இந்திய மத்திய, மாநில அரசுகள் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்தன. 

இதைத்தொடர்ந்து 42 படகுகளை மட்டும் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் படகுகளில் 10 படகுகள் மீட்க முடியாத நிலையில் சேதமாகிப் போனது.  எஞ்சிய படகுகளை மீட்க மீனவர்கள் குழுவினர் இலங்கை செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV