இலங்கை செய்திகள்

விசாரணைக்குச் சென்ற பொலிஸ் அதிகாரியை கொலை செய்த பிக்கு

10 Jul 2018

இரத்தினபுரி  கலெந்த பகுதியில் உள்ள பௌத்த விகாரையொன்றுக்கு விசாரணை நடவடிக்கைக்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரை அங்கிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் அதிகாரியே  இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கலெந்த பௌத்த விகாரையில் உள்ள பிக்குவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு பொலிஸ் அதிகாரி குறித்த இடத்துக்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த பிக்கு பொலிஸ் அதிகாரியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  குறித்த பொலிஸ் அதிகாரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு இடையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

​மேலும், பிக்குவை கைது செய்வதற்கு இரத்தினபுரி பொலிஸ் தலைமை அதிகாரி குறித்த இடத்துக்கு சென்ற போது  அவர் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ள குறித்த பிக்கு முயற்சிசெய்துள்ளார். எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்