இந்தியா செய்திகள்

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

14 Aug 2019

போர்க்களத்தில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன்.


அப்போது அவரது விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தததால் அந்த நாட்டு ராணுவத்திடம் சிக்கிய போதும் அந்த சூழ்நிலையை அவர் தீரத்துடன் எதிர்கொண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

இந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இந்த விருது சுதந்திர தினமான நாளை அவருக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பிரகாஷ் ஜாதவுக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.


 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்