இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

08 Nov 2018

டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நிராகரிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த ப.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கி  சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட வர்த்தமானியை, செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை நீக்குமாறு கோரி வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தாக்கல் செய்த மனுவையே உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்