இலங்கை செய்திகள்

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது

19 Mar 2023

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த இருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளின் போது மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்கள் பொலிஸாரால்  மீட்கப்பட்டன.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள பட்டறை ஒன்றில் வாளினை தயாரித்த அதன் உரிமையாளரை கைது செய்ததுடன் குறித்த நபரிடம் இருந்து வாளொன்றையும் கைப்பற்றியிருந்தனர்.

இதேவேளை பட்டறை உரிமையாளருக்கு உடந்தையாக செயற்பட்ட இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டு சம்பவங்களுக்காக பயன்படுத்திய உந்துருளிகளை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் விற்ற ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன், வாள்வெட்டு சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு உந்துருளிகளையும் கைப்பற்றியுள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam