கனடா செய்திகள்

வான்கூவரில் சுமார் 59 வருடங்களுக்கு பிறகு கடும் குளிர்

10 Oct 2019

வான்கூவரில் சுமார் 59 வருடங்களுக்கு பிறகு கடும் குளிர் உணரப்பட்டுள்ளதாக, கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 1960ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 2.8 செல்சியஸ் வரலாற்றை முறியடித்துள்ளது.

தற்போது, எதிர்வரும் நாட்களிலும் இதே நிலை தொடரும் எனவும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கனேடிய சுற்றுச் சுழல் திணைக்களம் கூறியுள்ளது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்