இலங்கை செய்திகள்

வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்றார் ஜனாதிபதி - சம்பந்தன்

16 Apr 2018

மக்­க­ளுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று ஜனாதிபதி மைத்­தி­ரிபால சிறி­சேன தெரி­வித்­துள்ளார் என்றும்,  அவ­ரு­ட­னான சந்­திப்­பில் பல விட­யங்­கள் பேசப்­பட்­டி­ருந்­தா­லும் அவை எல்­லா­வற்­றை­யும் இப்போது பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது என்றும்  தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்ளார்.

ஜனாதிபதி  தலை­மை­யில், தமிழ் – சிங்­கள புத்­தாண்டு விழா  சனிக்­கி­ழமை இடம் பெற்­றது. இதில் எதிர்­க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் கலந்து கொண்டார்.

இதன்போது  தமிழ் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் இன்­ன­மும் தீர்க்­கப்­ப­டாமை தொடர்­பில் தான் ஜனாதிபதியிடம்  கலந்துரையாடியதாகவும்,. மேலும், 2015ஆம் ஆண்டு தேர்­த­லின் போது வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­ வேண்­டும் என்­ப­தை வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்­பில் இப்­போது பகி­ரங்­க­மாக கூற­மு­டி­யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்