இலங்கை செய்திகள்

வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

24 Jan 2023

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) செவ்வாய்க்கிழமை  மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வானும் கல்முனையிலிருந்து கதுறுவெல நோக்கி பயணித்த பஸ் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் வான் சாரதி உயிரிழந்துள்ளதுடன், வானில் பயணித்த ஆறுபேர் காயங்களுக்கு உள்ளாகி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam