இலங்கை செய்திகள்

வவுனியா - பாவற்குளம் பகுதியில் தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு

16 May 2018

வவுனியா - பாவற்குளம் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

அதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 
குளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்