இலங்கை செய்திகள்

வவுனியா புளியங்குளம் ஏ 9 வீதி விபத்து பிந்திய செய்திகள்

11 Jul 2018

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட கோர விபத்தில் மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.


இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவத்தினருக்கு பொருட்களை கொண்டு  சென்ற ஹென்ரேனர் ரக வாகனமும், பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜேனி ரக பஸ்ஸும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஹென்ரர் ரக வாகன சாரதி மரணமடைந்த நிலையில் பஸ்சில் பயணித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளார்.


 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்