இலங்கை செய்திகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்

12 Jan 2019

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின்   50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 691 நாட்களாக வவுனியாவில் தொடர்ந்து சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் மேற்கொண்டு வரும்  காணாமல் ஆகக்கப்பட்டோர் சங்கத்தின் உறவுகளின் 50 குடும்பங்களுக்கு இன்று அறம் செய் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் ஆர். ஞானசேகரம், பொருளாளர் செல்வி த.கலைமதி ஆகியோர் கலந்துகொண்டு தொடர்ந்து போராட்டத்தை மேற்கொண்டு வரும் 50 காணாமல்போனோர் குடும்பங்களின் உறவுகளுக்கு  உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்துள்ளனர்.






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்