இலங்கை செய்திகள்

வவுனியாவில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

13 Mar 2018

வவுனியா - கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கனடா குடியுரிமை கொண்ட 83வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமது பூர்வீக இடமான யாழ்ப்பாணத்திலுள்ள உள்ள கோவில் உற்சவத்திற்கென தனது மனைவியுடன் கனடாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை வவுனியா கோவில்குளம் சின்னப்புதுக்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வதியும் தனது மகனின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர். நேற்று குறித்த நபரின் மனைவி உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் மகன் மற்றும் மருமகள் யாழ்ப்பாணத்திலுள்ள உறவினரது மரண சடங்கில் கலந்து கொள்ள சென்றிருந்ததாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.  இந்நிலையில் அவர் தனிமையில் இருந்துள்ளார்.

இன்று காலை வீடு நெடுநேரமாக திறக்கப்படாததை அவதானித்த அயல்வீட்டார் கதவினூடாக அவதானித்த வேளை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

சடலத்தின் அருகில் நஞ்சு மருந்தும் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எதிர்வரும் ஓரிரு தினங்களில் கனடாவிற்கு மீள செல்ல இருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் தூக்கில் தொங்கிய சடலத்தை  இறக்கி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்