இலங்கை செய்திகள்

வவுனியாவில் இளைஞனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

10 Oct 2018

வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்