இலங்கை செய்திகள்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயம்

14 Mar 2019

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் வீதியை கடந்துகொண்டிருந்த தாயையும் பிள்ளையையும் வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை புதிய பஸ் நிலையப்பக்கமாக இருந்து ஒன்றரை வயது மகனை தூக்கியவாறு தாயொருவர் பாதசாரி கடவையை கடக்க முயற்சித்துள்ளார். இவ்வாறு கடந்தவர் மீது வைத்தியசாலைப் பக்கமாக இருந்து வேகமாக வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் தாயும் பிள்ளையும் தூக்கி வீசப்பட்டதுடன் பட்டா வாகனம் பிள்ளைக்கு மேலாக ஏறிச் சென்றுள்ளது.

இதன்போது அப்பகுதியில் நின்றவர்களால் இருவரும் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவருக்கும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிமுடிகின்றது.

இந் நிலையில் குறித்த விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்