உலகம் செய்திகள்

வலுவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு போராட வேண்டும் - மெர்கல் சூசகம்

16 Jul 2017

தனது வாக்காளர்கள் மத்தியில் பேசும் போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் விலகலும், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மெக்ரானின் வெற்றியும் ஐரோப்பா மீதான தனது கருத்தை மாற்றிவிட்டதாக மெர்கல் கூறினார்.

ஜெர்மனியில் அடுத்த இரு மாதங்களில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ஒற்றுமைக்காக  பாடுபட போவதாக, குறிப்பாக அவர் நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டால் ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்காக பாடுபட உறுதியுடன் உள்ளதாகவும் கருதியுள்ளதாக தெரிகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பது ஜெர்மனியின் பெரிய வலு என்று கூறிய பிரிட்டனின் வெளியேற்றம், பிரான்ஸ் மற்றும் ஹாலந்து தேர்தல்களில் ஐரோப்பிய ஆதரவு கட்சிகளின் வெற்றி ஐரோப்பாவின் மீதான தனது பார்வையை மாற்றிவிட்டதாக அவர் கூறினார்.

ஐரோப்பவின் பல சுதந்திரமான கொள்கைகள், உதாரணமாக பேச்சு சுதந்திரம் போன்றவை உலகின் இதரப் பகுதிகளில் இல்லை. இதனால்தான் இன்றைய ஐரோப்பாவிற்காக போராடுவது மதிப்புடையது என்றார் மெர்கல். “இதனால்தான் நமது தேர்தல் பதாகைகள் ஐரோப்பா வலுவாக இருந்தால்தான், ஜெர்மனி வலுவாக இருக்கும். எனவே இது நேரடியாக தொடர்புடையது” என்றார்.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்றே தனியாக ஒரு நிதியமைச்சரை உருவாக்கி  எப்போதெல்லாம் உறுப்பு நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதிலிருந்து தடுத்து யூரோ டாலரை வலுப்படுத்தும் யோசனையும் அவர் முன் வைத்தார்.

 

 

 

 

 

 

 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்