இலங்கை செய்திகள்

வருமானத்தில் வட்டி அறவிட திட்டமா?

15 Sep 2021

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாதாந்த வருமானம் பெறுபவர்களிடம் 5 சதவீத வட்டியை அறவிடுவது தொடர்பில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, அவ்வாறான கருத்தானது அமைச்சர் பந்துல குணவர்தனவின் தனிப்பட்ட கருத்தாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்


Powered by Jasper Roberts - Inayam