இலங்கை செய்திகள்

வரட்சி காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

12 Jul 2019

வரட்சியான காலநிலை காரணமாக 8 மாவட்டங்களைச் சேர்ந்த 5 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துள்ள மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

வடக்கு, கிழக்கு மற்றும், புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, குறித்த பகுதிகளை சேர்ந்த மக்களின் குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்காக 50 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி, அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதற்கு மேலதிகமான, குறித்த பிரதேசங்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடிநீர் பௌசர்கள் மற்றும் குடிநீர் தாங்கிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வரட்சி மற்றும் ஏனைய அனர்த்த நிலைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து அது தொடர்பில் அறிவிக்க முடியும் என, மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்