இந்தியா செய்திகள்

வன்முறையில் சிக்கி மாயமான டெல்லி உளவுத்துறை அதிகாரி பலி

27 Feb 2020

டெல்லியில், குடியுரிமை திருத்த சட்டத்தின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்கள் இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 3 நாட்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால் தலைநகரில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் டெல்லி சந்த்பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா (வயது 26) என்பவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த வன்முறையில் சிக்கிக்கொண்டார். அவரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கியது. பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.


மாயமான அங்கித் சர்மாவை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், அங்குள்ள கழிவுநீர் கால்வாய் ஒன்றில் நேற்று அவர் பிணமாக கிடந்தார். அங்கித் சர்மாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையாளர்களின் தாக்குதலில் அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிகிறது.

உளவுத்துறை அதிகாரி பலியான சம்பவத்துக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்து உள்ளார்


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்