இலங்கை செய்திகள்

வன்னி தேர்தல் தொகுதியில் 95.25 வீதமான தபால் மூல வாக்குகள் பதிவு

07 Nov 2019

வன்னி தேர்தல் தொகுதியில் 95.25 வீதமான தபால் மூல வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பின் இறுதி நாள் வாக்களிப்புக்கள் இன்று  இடம்பெற்றன. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்குகள் 12184 ஆகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குகள் 10994 ஆகும். நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1190 ஆகும். இதுவரை வாக்களிக்கப்பட்ட தபால் வாக்குகள் 10472 ஆகும். இந்த அடிப்படையில் 95.25 வீதமான மக்கள் இதுவரை வாக்களித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை தேர்தல் முறைப்பாடுகளாக 36 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு முறைப்பாடுகளுக்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது எல்லா முறைப்பாடுகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்