கனடா செய்திகள்

வன்கூவரில் சேர். ஜோன் ஏ மக்டொனால்டின் சிலையை அகற்ற கோரிக்கை!

09 Aug 2018

வன்கூவர் விக்டோறியா நகரசபை கட்டிட நுழைவாசலில் உள்ள சேர். ஜோன் ஏ மக்டொனால்டின் சிலையை அகற்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.


கனடாவின் முதல் பிரதம மந்திரியான ஜோன் ஏ மக்டொனால்ட் சிலையை எதிர்வரும் ஆகஸ்ட்11 சனிக்கிழமை அகற்ற வேண்டும் என்று நகரசபைக்கு ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.


ஜோன் மக்டொனால்ட் அவர்கள் ஒரு போர்க்குற்றவாளி என்றும் அதனாலேயே அவ் வழியால் செல்பவர்களுக்கு இச் சிலையை காணும் பொழுது தொந்தரவு செய்வதாகவும் Esquimalt Nation  எனும் அமைப்பின்இயக்குனரான கேட்டி ஹீப்பர்(Katie Hooper) தெரிவித்துள்ளர்.
இன்நிறுவனம் விக்டோரியாவில் மூத்த குடிகளுக்கு சேவை வழங்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.
இச் சிலையை அகற்றுவது நகரத்தின் நல்லிணக்க பயணத்தின் ஒரு முக்கிய மைல் கல்லாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்