இலங்கை செய்திகள்

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம்

10 Jan 2019

வட மாகாண ஆளுநர் தலைமையில் வெள்ள அனர்த்த சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது.

இந்த கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

புதிதாக வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி சுரேன் ராகவன் இந்த கலந்துரையாடலில் ஈடுப்பட்டு வருகின்றார்.

கடந்த காலங்களில் வடக்கில் பெய்துவந்த அடைமழை மற்றும் வெள்ளம் காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்ட மக்கள் வெள்ள காலங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ள நீர் வடிந்தோடியதன் பின்னர் வீடுகளுக்கு சென்றிருந்தனர்.

எனினும் வெள்ளம் காரணமாக வீடுகள் உட்பட சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் தற்போதுவரை பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் சென்று பார்வையிட்டதுடன் அவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்தோடு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மக்கள், நிவாரண உதவிகளை குறித்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்