இலங்கை செய்திகள்

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியது

11 Feb 2019

வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அனுராதபுரத்தின் ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. 

வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணித்த ரயில் ஒன்று நேற்று தம்புத்தேகம ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதினால் வடக்கிற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன. 

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியே இவ்வாறு தடம்புரண்டது. இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்ய அனுராதபுரம் புகையிரத நிலைய அதிகாரிகள் உடனடியாக செயற்பட்டு புகையிரத சேவைகளை தற்சமயம் வழமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். 






கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்