உலகம் செய்திகள்

வட கொரிய அதிபரின் முன்னாள் காதலிக்கு பதவி

11 Oct 2017

வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்தவர் ஹயோன் சாங் வோல் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் வீடியோ ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக அதிரடிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

அதன் பின்னர் பாடகி ஹயோன் சாங் வோல் எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாததால், அவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் நம்பப்பட்டது.

ஆனால் ஓராண்டு கடந்த நிலையில் அவர் தேசிய தொலைக்கட்சியில் தோன்றி, ஜனாதிபதி கிம் ஜோங் வுன் கலைத்துறைக்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து பேசி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார்.

இந்த நிலையில் தற்போது ஆளும் கொரியா தொழிலாளர்கள் கட்சியில் முக்கிய முடிவுகளை தீர்மானிக்கும் அதிகாரம் படைத்த பதவியை பாடகி ஹயோன் சாங் வோல் பெற்றுள்ளார்.

பாடகி ஹயோன் சாங் வோல்  சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் கிம் ஜோங் உடன் நெருக்கமாக பழகியுள்ளார். இவர்களது காதல் கிம் தந்தைக்கு தெரிய வர, அந்த உறவு முடிவுக்கு வந்தது.

இருப்பினும் வடகொரியாவின் பெண்கள் இசைக்குழுவில் முன்னணி பாடகியாக வலம் வந்த  பிரபலமான பல பாடல்களை பாடியுள்ளார்.

இதனிடையே வடகொரிய ராணுவ அதிகாரி ஒருவரை மணந்து கொண்ட ஹயோன் சாங் வோல் ஒரு குழந்தைக்கு தாயாரானார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமது சகோதரியை ஆட்சியின் அதிகாரம் மிக்க பதவிக்கு கொண்டு வந்த கிம் ஜோங் வுன், தற்போது தமது முன்னாள் காதலியை கட்சியின் உயரிய பதவிக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்

Inayam TV