இலங்கை செய்திகள்

வடமேல் மாகாண வன்முறை தொடர்பில் இதுவரை 74 பேர் கைது

15 May 2019

வடமேல் மாகாணத்தின், மினுவாங்கொட பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என 74 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 33 பேர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் அசாதாரண சூழல் நிலவிவருகின்றது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினமும் மினுவாங்கொட உட்பட பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்