கனடா செய்திகள்

வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து

10 Jan 2019

வடக்கு யோர்க் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தை அடுத்து அந்த வீட்டில் இருந்த இருவர் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கானசர் டிரைவ், ஸ்டீல்ஸ் மற்றும் பேவ்வியூ பகுதியில் நேற்று  அதிகாலை 1:30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து மீட்புப்பணியாளர்கள் அங்கு சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் குறித்த தீ விபத்தானது குப்பை தொட்டியில் இருந்தே உருவாகியது என்றும் தெரிவித்தனர்.

அத்தோடு குறித்த வீட்டில் இருந்து இருவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள் அவர்களில் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கருத்துரைகள்


கருத்துரைகள் இல்லை


 

தொடர்புடைய செய்திகள்